சாணக்கியன் மீதான தடை தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்
ஏனைய தமிழ்க் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாத தடை உத்தரவு தமிழரசுக் கட்சியில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மட்டும் வழங்கப்பட்டதானது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஏனைய தமிழ்க்கட்சிகள் மறைமுக ஆதரவு வழங்குகிறார்கள் என்று மிகுந்த சந்தேகம் எழுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நீதிமன்ற தடை உத்தரவு
திருகோணமலை - இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து நேற்று (03.09.2023) மனித சங்கிலிப் போராட்டம் திருகோணமலை - சாம்பல் தீவு பாலத்துக்கு அருகில் தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செ.கஜேந்திரன் ஆகியோர் உள்ளடங்கலாக 14 பேருக்கு திருகோணமலை நிலாவெளி பொலிஸார் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவினை வழங்கியிருந்தனர்.
இருப்பினும் குறித்த தடை உத்தரவை மீறி தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இங்குள்ள மற்றைய தமிழ்க் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாத தடை உத்தரவு தமிழரசுக் கட்சியில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மட்டும் வழங்கப்பட்டதானது மற்றைய தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேல் மிகுந்த சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் இவ்வாறான விடயங்களுக்கு ஏனைய தமிழ்க்கட்சிகள் மறைமுக ஆதரவு வழங்குகின்றார்களோ என மிகுந்த சந்தேகம் எழுவதாக இரா . சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பைத் தடுக்கத் தமிழ்ச் சமூகம் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை: கஜேந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
