தமிழரின் தலைநகர் திருகோணமலை: தென்னிலங்கைக்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவால்
பேரினவாத ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்தாவிட்டால் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் ஏற்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை - சாம்பல்தீவு பாலத்திற்கு அருகில் சட்டவிரோத பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதேச சபை அனுமதி இன்றி விகாரை
தமிழர்களின் தலைநகரமான திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் திட்டமிட்டப்பட்ட வகையில் சூட்சுமமாக சிங்கள - பௌத்த பேரினவாதம் கபளீகரம் செய்து வருகின்றதை ஏற்றுக் கொள்ள முடியாது என கனகரத்தினம் சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சைவ கிறிஸ்தவ ஆலயங்கள் அதிகம் காணப்படும் பகுதிகளில் திட்டமிடப்பட்ட வகையில் சட்டவிரோதமாக பிரதேசசபையின் அனுமதி இன்றி இன்னொரு பௌத்த விகாரை கட்டப்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஜக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்கள் நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு காலதாமதம் செய்யாது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இல்லையென்றால் முள்ளிவாய்க்காய் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் இடம்பெறும் எனவும் கனகரத்தினம் சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
