டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமான பனிப்பாறையின் அபூர்வ புகைப்படம் ஏலத்தில்
இரண்டு துண்டாக உடைந்து கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறையின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தற்போது அந்த அபூர்வ புகைப்படம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளதோடு அது, 4,000 முதல் 7,000 பவுண்டுகள் வரை ஏலத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலத்தில் விற்பனை
1912ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி இரவு 10.20 மணிக்கு, டைட்டானிக் கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதி மறுநாள், அதாவது, ஏப்ரல் 15 அன்று, அதிகாலை 2.20 மணிக்கு மூழ்கியுள்ளது. இதன்போது சம்பவத்தில் 1,522 பேர் பலியாகியிருந்தனர்.
உலகைகே அதிரவைத்த அந்த தகவல் வெளியானதும், ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி கனடாவின் ஹாலிஃபாக்சிலிருந்து 100 சவப்பெட்டிகள் மற்றும் பனிக்கட்டிகளுடன் Mackay-Bennett என்னும் கப்பலில் இறுதிச்சடங்கு மைய உரிமையாளரான John Snow Jr என்பவர் தனது ஊழியர்களுடன் புறப்பட்டுள்ளார்.
இந்நிலையிலே அவர் குறித்த பனிப்பாறையின் புகைப்படத்தை எடுத்ததாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |