இஸ்ரேலின் கொள்கலன் கப்பலைக் கைப்பற்றிய ஈரான் : அதிகரிக்கும் போர் பதற்றம்
சிரியாவில் உள்ள ஈரான்(Iran) தூதரகம் மீது இஸ்ரேல்(Israel) நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பிறகு, பிராந்தியம் முழுவதும் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஈரான் ஆயுதப் படைகள் ஹோர்முஸ் கடற்பரப்பில் இஸ்ரேலுடன் தொடர்புடையதாக கூறப்படும் கொள்கலன் கப்பலைக் கைப்பற்றியுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
போர்த்துக்கல் நாட்டுக் கொடியுடன் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்ட இக்கப்பலில் 17 இந்திய கடற்படை வீரர்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பலை கைப்பற்றியதாக போர்ச்சுகல்
சிரியாவில் உள்ள தனது இராணுவ மையத்தை இஸ்ரேல் தாக்கியதற்குப் பழிக்குப் பழி வாங்குவதாக சூளுரைத்த ஈரான் MSC Aries எனும் இக்கப்பலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷ்ய தயாரிப்பான Mil Mi-17 எனும் உலங்கு வானூர்தி(Helicopter) பயன்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் வாணிப கப்பலை கைப்பற்றிய ஈரானிய இஸ்லாமிய புரட்சி காவல்படை (IRGC) அதனை முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், நவம்பர் பிற்பகுதியில் இந்தியப் பெருங்கடலில் மற்றொரு இஸ்ரேலிய கொள்கலன் கப்பல் ஆளில்லா விமான தாக்குதலில் தாக்கி சேதப்படுத்தப்பட்டது, இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |