இஸ்ரேல் - ஈரான் மோதலால் உலகப்போர் ஏற்படும் அபாயம்: எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப்
இஸ்ரேல்-ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump)எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது கூறியுள்ளார்.
ஆபத்தான காலகட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்ககையில், அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம் என்றும், அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.

அதற்கு முன்பாக அதுவும் குறிப்பாக தற்போது உள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் 3 முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் விரைவில் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam