மத்திய கிழக்கில் விரிவடையும் மோதல் - இந்தியா விடுத்துள்ள எச்சரிக்கை
இந்திய குடிமக்கள் ஈரான் (Iran) மற்றும் இஸ்ரேலுக்கு (Israel) செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் உத்தரவு பிறப்பிக்கும் வரை இதைப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஈரான் (Iran) மற்றும் இஸ்ரேலில் (Israel) வசிக்கும் இந்திய குடிமக்கள் அருகில் உள்ள இந்திய தூதரகங்களை (Indian Embassies) தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
இரு நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்கள் மிகவும் கவனமாகவும், தேவையற்ற நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டும்.

சிரியா (Syria) தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது ஏப்ரல் 1ஆம் திகதி இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் (Iran) எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலை தாக்க தயாராகிறது.
இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுக்கான விமான சேவை ரத்து தொடரும் என்று ஜேர்மன் விமான பணியகம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri