வெளிநாட்டு சுப்பமார்க்கட்டில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவம் - 6 பேர் பலி
புதிய இணைப்பு
அவுஸ்திரேலியாவின் (Australia) சிட்னியில் (Sydney) அமைந்துள்ள பல்பொருள் அங்காடி கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 மாத குழந்தை உள்ளிட்ட 8 படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
அவுஸ்திரேலியாவின் (Australia) சிட்னியில் (Sydney) அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக் குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பல்பொருள் அங்காடியில் கத்திக் குத்து
சிட்னியில் (Sydney) உள்ள வெஸ்ட்ஃபீல்ட் பல்பொருள் அங்காடியில் (Super Market) இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து குறித்த கட்டிடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு, கட்டிடம் முழுவதுமாக பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், தாக்குதல்தாரி தொடர்பில் பொலிஸார் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 9 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
