யாழில் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்குள்ளான நபர் விபரீத முடிவினால் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர் தவறான முடிவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமியை வன்புணர்விற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், கடந்த 3 ஆம் திகதி காரைநகர் பகுதியைச்
சேர்ந்த 47 வயதுடைய ஒருவரை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்ய அவரது
வீட்டுக்குச் சென்றபோது சந்தேகநபர் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது அவரை மீட்டு காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை
பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam