தடை தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. இலங்கையில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் கொண்டு வரப்படும் புதிய நடைமுறை தொடர்பில் தொடருந்து பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடருந்து ஆசனங்களை, முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்படவுள்ளது.
தொடருந்து பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! எதிர்வரும் 13ஆம் திகதி முதல் புதிய நடைமுறை >>> மேலும் படிக்க
2. கடந்த மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட அந்நிய செலாவணியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி கடந்த மாதம் 325.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியில் திடீர் அதிகரிப்பு - மத்திய வங்கி தகவல் >>> மேலும் படிக்க
3. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மகிந்தவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“இது தான் எமது கட்சி செய்த தவறு”! புதிய கூட்டணி தொடர்பில் அறிவித்தார் நாமல் >>> மேலும் படிக்க
4. ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு பெருந்தொகை அவசர உதவி கடனை வழங்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள அவசர உதவி கடன் >>> மேலும் படிக்க
5. உண்டியல் மற்றும் ஹவாலா ஆகிய சட்டவிரோத முறைகளின் மூலம் இரண்டு மாதங்களில் ஒன்பது கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள உண்டியல் மற்றும் ஹவாலா ஆகிய சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைமைகள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
உண்டியல் முறை மூலம் கோடிக்கணக்கான பணம் பரிமாற்றம் - வங்கி கணக்குகள் பரிசோதனை >>> மேலும் படிக்க
6. அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பதாகவும் அவற்றை உடனடியாக திருத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்திய முதலீடுகளை ஒத்துழைப்புகளை நாட்டில் நடைமுறைப்படுத்துவது மற்றும் சில அபிவிருத்தித்திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராய்வதற்காக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அபிவிருத்திக்கு ஏற்பட்டுள்ள தடை: ஜனாதிபதியின் உடனடியான உத்தரவு >>> மேலும் படிக்க
7. தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஓர் ஒழுங்குமுறையில் தீர்வுகளைக் காணும் பணியை எமது அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்தே தீரும் என்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
ஜெனிவா சென்றுள்ள இலங்கை அரசாங்க குழுவிலுள்ள முக்கியஸ்தரான நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் வைத்து நீதி அமைச்சர் விஜயதாஸ புலம்பெயர் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை >>> மேலும் படிக்க
8. காலிமுகத்திடல் போராட்டத்தின் பின் கைது செய்யப்பட்ட லஹிரு வீரசேகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலிமுகத்திடல் போராட்டத்தின் பின் கைதான லஹிரு வீரசேகர திடீரென வைத்தியசாலையில் அனுமதி >>> மேலும் படிக்க
9. கடந்த நாட்களில் பாணின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினமும் பாணின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, சில பேக்கரி உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிறையை விட குறைவான நிறையுடைய ஒரு இறாத்தல் பாணை 190 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மீண்டும் பாணின் விலையில் மாற்றம் >>> மேலும் படிக்க
10. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய புதிய அமைச்சர்களில் 10 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்படவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாமல், ஜீவன் உட்பட 12 பேருக்கு அமைச்சு பதவி >>> மேலும் படிக்க