தொடருந்து பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! எதிர்வரும் 13ஆம் திகதி முதல் புதிய நடைமுறை
இலங்கையில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் கொண்டு வரப்படும் புதிய நடைமுறை தொடர்பில் தொடருந்து பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே ஒதுக்கப்படும் ஆசனங்கள்
அதன்படி தொடருந்து ஆசனங்களை, முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்படவுள்ளது.
தொடருந்து ஆசனங்களை ஒதுக்கிக் கொள்வதற்கான அதியுச்ச காலம் 14 நாட்களாக உள்ளன.

அந்த கால எல்லை, 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொது மக்களின் கோரிக்கை
பொதுமக்களின் கோரிக்கைக்கு அமையவும், உயர்தர சேவையை வழங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 13ஆம் திகதி முதல், தொடருந்து ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கான அதியுச்ச கால எல்லை 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam