கடலில் திடீரென விபத்துக்குள்ளான கப்பல்.. மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில்! ஒருவர் மாயம்
புதிய இணைப்பு
கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானையை அண்மித்த கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கடற்படை கப்பலில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவரை காணவில்லை எனவும் அவரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானையை அண்மித்த கடற்பகுதியில் கடற்படைக்கு சொந்தமான டோரா கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படையின் உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
டோரா கப்பல் விபத்து
கடற்படையினர் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விபத்துக்குள்ளான கப்பலைக் கண்காணிப்பதற்காக விமானப்படைக்குச் சொந்தமான Mi-17 மற்றும் பெல் 412 ஆகிய உலங்கு வானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்