இலங்கைக்கு வழங்கப்படவுள்ள அவசர உதவி கடன்
ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு பெருந்தொகை அவசர உதவி கடனை வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் நேற்று ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் இந்த உதவி வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய, ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு 203 மில்லியன் அமெரிக்க
டொலர்கள் அவசர உதவி கடனை வழங்குகிறது.
அவசர உதவி கடன்

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து அவசரகால கடன் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் போது, ஆசியா மற்றும் பசுபிக் நிதியம், திட்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது.
இந்த நிதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாகவே வழங்கப்படவுள்ளது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam