அபிவிருத்திக்கு ஏற்பட்டுள்ள தடை:ஜனாதிபதியின் உடனடியான உத்தரவு
அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பதாகவும் அவற்றை உடனடியாக திருத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உடனடி உத்தரவு

இந்திய முதலீடுகளை ஒத்துழைப்புகளை நாட்டில் நடைமுறைப்படுத்துவது மற்றும் சில அபிவிருத்தித்திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராய்வதற்காக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் இந்திய பிரதித் தூதுவர் வினோத் ஜேகப் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்திய முதலீட்டிற்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள தடைகள்

இந்திய முதலீட்டின் அடிப்படையில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் சில திட்டங்களில் முன்னேற்றங்கள் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள தடைகளை துரிதமாக களைய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகளுக்கு இதன் போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த அரசாங்கம் அடிக்கடி வெளியிட்ட சுற்றறிக்கைகளில் உள்ளடக்கப்பட்ட விடயங்களில் அபிவிருத்திக்கு தடையேற்பட்டிருந்தால், அதனை உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுப்படுத்தியுள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய என்ட்ரியால் ஷாக்கில் அண்ணாமலை குடும்பம்... மனோஜ் மாட்டிக்கொண்டாரா? Cineulagam