அரசியலில் புது வியூகம் அமைக்கும் ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை கோருவதாக அரசியல் வட்டாரங்கள் பரவி வருகின்றன.
இதன்போதே எதிர்வரும் ஜூலை மாதம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆராய்வதற்காக அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் கலந்துரையாடியதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பத்தரமுல்லயிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இந்த குழுக்களில் ஒருவருடன் 2 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பு
முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர் ஜயவர்தன சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற காலத்தை நீடித்திருந்தார்.
அதேபோன்று சமகால அரசாங்கமும் செயற்பட முடியுமா என சட்ட நிபுணர்களிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
எனினும் இந்த நடவடிக்கைகளுக்கு சட்ட தடைகள் இருப்பின் மேற்கொள்ள வேண்டிய மாற்று வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்ட வல்லுநர்கள் ஆலோசனை
சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு இரண்டு வாய்ப்புகள் இருப்பதாகவும், தேசிய ரீதியில் முக்கியமான பிரச்சினையை ஜனாதிபதி குறிப்பிட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சட்ட வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மும்முரமாக தமது பிரச்சார பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சூழ்ச்சியான முறையில் தேர்தலை நிறுத்தி தமது அதிகாரத்தை தொடரும் நடவடிக்கையில் ரணில் ஈடுபட்டு வருகின்றார். இந்த செயற்பாடானது எதிரணியருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
