வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டத்தை இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல், சில வகை வாகனங்களின் கீழ் இந்த ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காம் காலாண்டுகளில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள்
2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகனங்களை தளர்த்துவதற்கும், இந்த வருடத்தின் நான்காம் காலாண்டில், வர்த்தக வாகனங்கள் மற்றும் பிற வகை வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவுகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக நாணய நிதியத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துதல், நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு வளர்ச்சி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |