அம்பாறையில் மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவனுக்கு நேர்ந்த கதி
அம்பாறையில் (Ampara) மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(14.06.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், அம்பாறை - காரைதீவைச் சேர்ந்த 20 வயதுடைய சிவகரன் அக்சயன் என்ற மாணவனே நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத்துறைக்குத் தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவராவார்.
இவர் அண்மையில் வெளியான 2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தில் 23 ஆவது இடத்தில் மருத்துவத்துறைக்குத் தெரிவாகியுள்ளார்.
இந்நிலையில், அவர் தனது குடும்பத்துடன் மூன்று நாட்களுக்கு முன்பு உகந்தமலை முருகன் ஆலயத்துக்குச் சென்று அங்கிருந்து இன்று(14) காலை வரும் பொழுது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றிலே நீராடியபோது மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலும், அவரது சடலம் மேலதிக விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக லாகுகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - ஷிஹான் பாரூக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
