ரணில் - மனோ தரப்பு இடையே அவசர சந்திப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைக் குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது ரணிலின் அழைப்பின் பெயரில் அவரது ஃப்ளவர் வீதி அலுவலகத்தில் இன்று(10) நடைபெற்றுள்ளது.
நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஒத்துழைப்பது பற்றி உரையாடல் இடம்பெற்றது என்று கூட்டணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர சந்திப்பு
ரணில் நாளை (11) ரஷ்யா செல்லவுள்ளதால் இந்தச் சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறிய கூட்டணி தரப்பு, உள்ளூராட்சி மன்ற விவகாரம் தவிர்த்த ஏனைய விடயங்கள் உரையாடப்பட்டனவா என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
