ரணிலுக்கு நீதிமன்றில் தண்டனை விதிக்கப்படும் : அனுரகுமார சாடல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நீதிமன்றில் தண்டனை விதிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் ஆட்சி செய்த பலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்ற அடிப்படையில் ஜனாதிபதியும் சிறையில் இருக்க வேண்டியவர் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுமலர்ச்சியொன்று அவசியம்
நீதிமன்றினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள் சட்டத்தை மிதித்துக் கொண்டு ஆட்சியில் நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் தேசிய மறுமலர்ச்சியொன்று அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெறும் ஆட்சி மாற்றத்தின் மூலம் இந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்திவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு தலைமை வகிக்க தமது கட்சி தயார் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் கனடாவில் புகலிடம் கோருவதில் சிக்கல் : மூத்த ஊடகவியலாளர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |