இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற ஈரானின் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை உடனடியாக ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
காலி தலைமை நீதவான் சமீர தொடங்கொட இன்று (11) காலை காலி தேசிய வைத்தியசாலையில் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
காலி தேசிய வைத்தியசாலையில், இரண்டு குளிர் அறைகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய கடற்றொழிலாளர்களின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

காலி துறைமுக பொலிஸார் காலி தலைமை நீதவான் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை,ஈரானிய கப்பல் தாக்குதலில் உயிரிழந்த கடற்றொழிலாளர்களின் பிரேத பரிசோதனையில், வெடிப்பு காரணமாக ஏற்பட்ட எலும்பு முறிவுகள், உள் காயங்கள், நீரில் மூழ்குதல் போன்ற காரணங்களால் அவர்கள் இறந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam