இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற ஈரானின் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
ஈரானிய கப்பலில் இருந்த கடற்றொழிலாளர்களின் பிரேத பரிசோதனையில், வெடிப்பு காரணமாக ஏற்பட்ட எலும்பு முறிவுகள், உள் காயங்கள், நீரில் மூழ்குதல் போன்ற காரணங்களால் அவர்கள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரிகள் குழுவால் பிரேத பரிசோதனைகள்
ஈரானிய கப்பல் மீதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் காரணமாக மூழ்கிய கப்பலில் இருந்து உயிரிழந்த 84 கடற்றொழிலாளர்களின் உடல்கள் கடற்படையினரால் காலி தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த உடல்களின் பிரேத பரிசோதனைகள் சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட்டன.

சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரி பேராசிரியர் யு.சி.பி. பெரேரா, சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரி பேராசிரியர் அஜித் ரத்னவீர மற்றும் சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜானகி வருஷஹென்னடி மற்றும் 12 தடயவியல் மருத்துவ அதிகாரிகள் பிரேத பரிசோதனைகளில் பங்கேற்றனர். இந்த பிரேத பரிசோதனைகள் நேற்று (06) அதிகாலை 5.00 மணி வரை இந்த தடயவியல் மருத்துவக் குழுவால் நடத்தப்பட்டன.
இந்த தடயவியல் குழு மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் மூன்று உடல்களில் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டது. பிரேத பரிசோதனைகளுக்குப் பிறகு, உடல்கள் இரண்டு சிறப்பு குளிர்பதன சேமிப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
ஏனையோரின் நிலைமை
இதேவேளை, கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 32 ஈரானிய கடற்றொழிலாளர்கள் ஐந்து பேர் இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஏனைய 27 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் பலர் நாளைக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் ஈரானிய தூதரகத்தின் தலையீட்டைத் தொடர்ந்து கடற்படையினரால் வெலிசறை கடற்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.
மேலும் பலரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரானிய கப்பலின் எச்சங்களை தொடர்ந்து தேடி வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
என்ட்ரி கொடுக்கும் புதிய நடிகர்கள், மாறப்போகும் கதை... எதிர்நீச்சல் சீரியல் குறித்து சூப்பர் அப்டேட் Cineulagam
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri