எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி அநுர கோரிக்கை
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். .
இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் (COYLE) 2026ஆண்டு பொதுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தி எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் பொறுப்பு
தொடர்ச்சியான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, அந்த நோக்கத்திற்காக தங்கள் அரசாங்கம் பாடுபடுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டை நோக்கி எண்ணெய் கப்பல் வருகின்றதென்றால் இடையில் என்ன நடக்கும் என்பது யாராலும் உறுதியாக கூற முடியாது. உலக நிலைமையுடன் சமாளித்து போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எப்போது விலை குறையும் என கேட்பவர்களிடம் போர் எப்போது முடியும் என்றே கேட்க முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலக சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்ததன் காரணமாக, இலங்கையில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam