மொட்டு பக்கமே ரணில் விக்ரமசிங்க: மகிந்த ராஜபக்ச விளக்கம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எம்முடனேயே உள்ளார், இந்த ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மொட்டுவின் ஆட்சியில் ஜனாதிபதியும், பிரதமரும்தான் பதவி விலகினார்கள். ஆனால், புதிய ஜனாதிபதி, புதிய பிரதமருடன் 'மொட்டு' ஆட்சி தொடர்கின்றது.
கட்சி ஆதரவு
ரணில் விக்ரமசிங்க, தினேஷ் குணவர்த்தன ஆகிய இருவரும் எனது சிறந்த நண்பர்கள். ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை வகிக்கும் அவர்களுக்கு எமது கட்சியின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன எமது கட்சியின் மூத்த உறுப்பினர். அவரின் பதவியை நாம் பறிக்கவுள்ளதாக சில ஊடகங்கள் விஷமத்தனமான பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதற்குப் பின்னால் எதிர்க்கட்சியினர் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
