இலங்கை அரசியலில் ஏற்படப்போகும் மாற்றம் : உறுதிப்படுத்திய மொட்டு கட்சி உறுப்பினர்!
"இலங்கையின் அரசியல் களத்தில் விரைவில் அதிரடிகள் காத்திருப்பதாகவும் அதிரடிகள் அரங்கேறிய பின்னர் அவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள் எனவும் ராஜபக்சக்களின் முக்கிய சகாவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய தினம் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "எதிர்க்கட்சியில் இருந்து பலர் அரசுடன் இணையவுள்ளனர் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்
அதேவேளை, அரசிலிருந்து சிலர் எதிரணிப் பக்கம் வரவுள்ளனர் என்று மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், உண்மையில் எந்தத் தரப்பில் 'பல்டி' இடம்பெறும் என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். நாம் அமைச்சுப் பதவிக்காக அலையவில்லை.
தரமான அமைச்சுப் பதவி கிடைத்தால்
அதனூடாக எமது சேவைகளை வழங்கத் தயாராக இருக்கின்றோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பலமான ஆளும் கட்சி. அது பிளவடையக்கூடாது என்பதுதான்
எமது விருப்பம்" எனத் தெரிவித்துள்ளார்.