ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு
சுகாதார அமைச்சர் பதவியை வழங்குவதற்கு தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் சுகாதார அமைச்சர் பதவியை தமது கட்சி விரும்புவதாக ஜனாதிபதி தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைமையால் ராஜித சேனாரத்ன, அரசாங்கத்துடன் இணைவது மேலும் தாமதமாகி
வருவதாகவும் அவர் அரசாங்கத்துடன் இணைந்தால் அவருக்கு வேறு அமைச்சுப் பதவி
வழங்குவது தொடர்பிலும் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருவதாக அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,