அமெரிக்க வரலாற்றில் சாதனை படைத்த இளவயது மெய்வல்லுநர்
அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் ஒலிம்பிக் மெய்வல்லுநர் அணியில் இடம்பிடித்த இளம் வீரராக குவின்சி வில்சன் சாதனை படைத்துள்ளார்.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்க மெய்வல்லுநர்களுக்கான ஒலிம்பிக் திறன்காண் போட்டியில் பங்குபற்றி சிறந்த நேர பரிதியை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஆண்களுக்கான 400 *4 மீற்றர் திறன்காண் அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய குவின்சி வில்சன், 45 59 செக்கன்களில் ஓடி முடித்தன் மூலம் வில்சன் புதிய சாதனையை நிலைநாட்டினார்.
ஒலிம்பிக் தொடர்
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் தொடர்ச்சியான பயிற்சிகளில் குவின்சி வில்சன் ஈடுபடவுள்ளார். அத்துடன் லண்டனில் அல்லது மியாமியில் நடைபெறவுள்ள 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்ற திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |