இஸ்ரேலின் உத்தேச மரண தண்டனை சட்டத்திற்கு ஐ.நா எதிர்ப்பு
இஸ்ரேலிய அரசினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச மரண தண்டனை சட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
“தீவிரவாதச் செயல்களில்” ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை விதிக்கும் வகையில் இஸ்ரேலில் முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் குழு, கடுமையான கவலை வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட சில தரப்பினரை இலக்கு வைக்கும் வகையில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரஜைகள் மற்றும் இஸ்ரேலில் தங்கியிருப்போர் கொலை செய்யப்பட்டால் இந்த மரண தண்டனை விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேல், மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் இந்த மரண தண்டனை அமுலாக்கம் செய்யப்பட உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் பிரித்துவைக்கப்பட்ட முறையில் அமல்படுத்தப்படும் என நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் மேற்குக் கரையில் வசிக்கும் இஸ்ரேலியர்கள் தவிர்ந்த பாலஸ்தீன மக்கள் மட்டும் தண்டிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவத்தின் விசாரணைகள் சர்வதேச தர நிர்ணயங்களுக்கு உட்படுத்தப்பட்டவை அல்ல என தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சர்வதுச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்களுக்கு அமைவாக இஸ்ரேலிய இராணுவம் விசாரணைகளை நடத்தாது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வலதுசாரியான தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் முன்னெடுத்துவரும் இந்த சட்டத்தை இஸ்ரேல் வாபஸ் பெறவேண்டும் என மனித உரிமை அமைப்புகளும், கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri
சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam