ஜெர்மனியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்
நேற்று நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
இதில் ரவுண்ட் ஆப் 16 சுற்று முடிவில் பிரான்ஸ், போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரர் டேனி ஒல்மா ஒரு கோல் அடித்தார்.
இறுதி நிமிடங்களில் கோல்
ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி வீரர் புளோரியன் விர்ட்ஸ் ஒரு கோல் அடித்தார்.
இந்த நிலையில் வழக்கமான ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.
இதையடுத்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 119-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
