கோர தாக்குதல்களில் களமிறங்கியுள்ள வல்லரசுகள்.. அமெரிக்காவில் பதிவான முதல் மரணங்கள் அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மூன்று படைவீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மூன்று படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் படுகாயமடைந்ததாகவும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.
மேலும் பலர் சிறு சிறு காயங்கள் மற்றும் மூளையதிர்ச்சிகளுக்கு ஆளானார்கள் - மேலும் அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அறிவித்துள்ளது.
பதிலடி தாக்குதல்கள்
அத்துடன், முக்கிய போர் நடவடிக்கைகள் தொடர்கின்றன, எங்கள் பதிலடி முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அமெரிக்க மத்திய கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், “நிலைமை சீரற்றதாக உள்ளது, எனவே குடும்பங்களுக்கு மரியாதை நிமித்தமாக, எங்கள் இறந்த வீரர்களின் அடையாளங்கள் உட்பட கூடுதல் தகவல்களை, அடுத்த உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்ட 24 மணி நேரம் வரை நாங்கள் மறைப்போம்,” என்றும் கூறியுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தொடங்கிய தாக்குதலை தொடர்ந்து, ஈரான் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.
இந்நிலையில், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் குறித்த போர் பதற்றம் காரணமாக பலி எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க துருப்புக்களில் மரணம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் முதல் மரணங்கள் இதுவாகும் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri