கோபா அமெரிக்கா தொடரின் அரையிறுதிக்கு ஆர்ஜன்டீனா தகுதி
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இதில் ஆர்ஜென்டினா - ஈகுவடார் அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய 35ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டினா வீரர் மார்ட்டினேஸ் கோல் அடித்தார்.
இதனால் ஆர்ஜென்டினா முதல் பாதி நேரத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றது.
வாய்ப்பை தவறவிட்ட மெஸி
2ஆவது பாதி நேரத்தில் ஈகுவடார் அணி வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் போட்டி முடிவில் வழங்க்கட்ட கூடுதல் நேரத்தில் 91ஆவது நிமிடத்தில் ஈகுவடார் அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சக வீரர் பாஸ் செய்த பந்தை கெவின் ரோட்ரிக்ஸ் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் போட்டி 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
ஆர்ஜென்டினா முதலில் ஆரம்பிடித்தது. மெஸ்சி முதல் வாய்ப்பை பயன்படுத்தினார். பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றது.
இதனால் மெஸ்சி ஏமாற்றம் அடைந்தார். அடுத்து ஈகுவடாரின் முதல் வாய்ப்பில் அந்நாட்டு வீரர் அடித்த பந்தை அர்ஜென்டினா கோல் கீப்பர் சிறப்பாக தடுத்தார்.
அதன்பின் அர்ஜென்டினா தொடர்ந்து 3 வாய்ப்புளிலும் கோல் அடித்தது. ஈகுவடார் 2ஆவது வாய்ப்பிலும் கோல் அடிக்காமல் தவறவிட்டது.
3ஆவது மற்றும் 4ஆவது முறை கோல் அடித்தது. இதனால் அர்ஜென்டினா 3-2 என முன்னிலையில் இருந்தது.
ஐந்தாவது மற்றும் கடைசி வாய்ப்பை அர்ஜென்டினா கோலாக மாற்றியது. இதனால் 4-2 என ஆர்ஜென்டினா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |