வரலாற்றில் முதல்முறையாக வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
வரலாற்றில் முதல்முறையாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வாகன சந்தையில் மின்சார வாகனங்களின் விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், வரலாற்றிலேயே முதல்முறையாக மின்சார வாகனங்களின் விற்பனை, எரிபொருள் வாகனங்களின் விற்பனையை விஞ்சியுள்ளது.
வாகன பதிவுகள் அதிகரிப்பு
ஐரோப்பிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தரவுகளின்படி, வாகன பதிவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, மின்சார வாகனங்கள்: 17.4% ,பிளக்-இன் ஹைப்ரிட் (Plug-in Hybrid): 9.4%, ஹைப்ரிட் வாகனங்கள் (Hybrid): 34.5% சதவீதமாக பதிவாகியுள்ளதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களின் பதிவு 61% ஆக உயர்ந்துள்ளது.
விலை மாற்றத்திற்கு முக்கிய காரணம்
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்குப் பெருமளவிலான வரிச் சலுகைகளையும் மற்றும் ஊக்கத்தொகைகளையும் வழங்குவதே இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக எரிபொருள் வாகனங்களின் பதிவு 22.5% ஆக குறைந்துள்ளது.
இதன்படி, சந்தையில் டெஸ்லா போன்ற நிறுவனங்களுக்குப் சவாலாக, BYDபோன்ற சீன நிறுவனங்கள் ஐரோப்பிய சந்தையில் 200% க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam