யூரோ கிண்ண காலிறுதி தொடருக்கு நெதர்லாந்து - துருக்கி அணிகள் தகுதி
யூரோ 2024 கால்பந்து தொடரின் நேற்று இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் நெதர்லாந்து மற்றும், துருக்கி அணிகள் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
தற்போது இடம்பெற்று வரும் 2ஆவது சுற்றில் 16 அணிகள் பங்குபற்றி காலிறுதிக்கான ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.
அந்த வகையில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் ரோமானியா அணிகள் மோதின.
நெதர்லாந்து அணி
ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணி முதல் பாதியில் கோடி கேக்போ அடித்த பெனல்டிக் கோல் மூலம் 1 -0 என முன்னிலை பெற்றது.
அதனை தொடர்ந்து 2 ஆவது பாதியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நெதர்லாந்து அணியின் மலென் அடுத்தடுத்து 2 கோல்களை அணிக்காக பெற்றுக்கொடுக்க நெதர்லாந்து அணி 3 - 0 என்ற கணக்கில் ரோமானியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
அதனை தொடர்ந்து இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில், துருக்கி மற்றும் ஆஸ்திரியா அணிகள் மோதின. குறித்த போட்டியில் துருக்கி அணி 2 - 1என்ற கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
துருக்கி
துருக்கி வீரர் மெரி டெமிரல் அணிக்காக முதலாவது கோலை பெற்றுக்கொடுக்க ஆஸ்திரியா அணி கோல் அடிக்க முனைப்பு காட்டியது.
எனினும், அந்த அணி வீரர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் துருக்கி அணி 59 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தது.
இதைத் தொடர்ந்து போட்டியின் 66ஆவது நிமிடத்தில் ஆஸ்திரியா கோல் அடித்தது. இதன் காரணமாக ஆஸ்திரியா போட்டியில் தனது முதல் கோலை பதிவு செய்தது.
இறுதி நிமிடம் வரை போட்டியானது 2 -1 என தொடர துருக்கி அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
இதன்படி நடைபெறவுள்ள காலிறுதி சுற்றுக்கு துருக்கி, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், போர்த்துகல், நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
