அரசை வன்மையாக கண்டிக்கும் பேராயர் மெல்கம் ரஞ்சித்...
அரசின் சில அமைச்சர்கள் மதத் தலைவர்களை அவமதிப்பதை தான் வன்மையாக கண்டிப்பதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
78ஆவது சுதந்திர தின கிருஸ்தவ தேவ ஆராதனை பொரல்லையிலுள்ள தேவாலயத்தில் நடைபெற்றது.அந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மதிக்கப்பட வேண்டிய பௌத்த பிக்குகள்
எமது நாட்டின் உள்ளார்ந்த சிந்தனை பௌத்த தர்மத்தை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.அதனோடு இணைந்த சிந்தனைக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் ஒழுக்க விழுமியங்களும் பௌத்த தர்மத்தை கொண்டு பிணைக்கப்பட்டுள்ளது.தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு.

ஆனால் அந்த மதங்களில் நீண்ட காலமாக பௌத்த தர்மம் முதன்மையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
அதனால் நாட்டின் தலைவர்கள் அந்த கொள்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதற்கு மாற்றமாக செயற்பட்டு நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த நினைப்பது சிறந்த நடைமுறையாகாது என குறிப்பிட்டுள்ளார்.