உலக சந்தையில் எண்ணெய் விலையில் கடும் சரிவு
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாகச் சரிவடைந்துள்ளது.
ஈரான் தொடர்பான மத்திய கிழக்கு மோதல் தணிந்து, அந்த பிராந்தியத்தில் எண்ணெய் விநியோகம் மீண்டும் சீரடையும் என்ற எதிர்பார்ப்பே இதற்குக் காரணமாகும்.
சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) மசகு எண்ணெய் 98.32 அமெரிக்க டொலராகவும், அமெரிக்காவின் WTI எண்ணெய் 90.83 டொலராகவும் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பதிவாகின.
வீழ்ச்சி
கடந்த வாரத்தில் பிரெண்ட் எண்ணெய் விலை சுமார் 17 சதவீதமும், WTI எண்ணெய் விலை சுமார் 13 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளன.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்னர் பதிவான மிகப்பெரிய வாராந்த வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து, ஈரானுடனான மோதலுக்கு இராஜதந்திரத் தீர்வொன்றை அமெரிக்கா முன்னெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
மேலும், மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் மற்றும் உலகளாவிய எரிபொருள் தேவை குறைவடைதல் ஆகியனவும் விலை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன.