இலங்கையில் மிகவும் ஆபத்தான 48 குழுக்கள்! அடுத்தக் கட்ட நகர்வு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
நாட்டில் மிகவும் ஆபத்தான 48 முக்கிய திட்டமிட்ட குற்றக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் பொதுமக்களை ஒடுக்கும் நோக்கில் மக்கள் விரோதமான சட்டங்களை உருவாக்கவில்லை. மாறாக நாட்டில் செயல்படும் திட்டமிட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக ஒரு பிரத்யேக சட்டக் கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கி வருகின்றது.
நாட்டில் 48 முக்கிய திட்டமிட்ட குற்றக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள. இக்குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்த விரைவான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பு.

எங்கள் அரசாங்கம் பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்தையும் இயற்றாது. தொழிற்சங்க நடவடிக்கைகள், மாணவர் இயக்கங்கள், அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துதல் மற்றும் பொதுப் போராட்டங்கள் ஆகியவை இந்த புதிய சட்டங்களின் வரம்பிற்குள் வராது.
அரசாங்கம் கொண்டு வரும் சட்டங்கள் குறித்து ஏதேனும் தரப்பினருக்குச் சட்ட ரீதியான ஆட்சேபனைகள் இருந்தால், உச்ச நீதிமன்றத்தில் அவற்றைச் சவால் செய்வதற்கான ஜனநாயக வழிகள் எப்போதும் திறந்தே உள்ளன.
இருப்பினும், எதிர்க்கட்சியில் உள்ள சில தரப்பினர், இந்தச் சட்டங்கள் குறித்து தவறான விளக்கங்களை அளித்து பொதுமக்களைத் திசைதிருப்ப முயல்கின்றனர்.
சமீப காலமாக இலங்கை பொலிஸாருக்கு எதிராக பல்வேறு குழுக்களால் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய போராட்டங்களுக்குப் பின்னால் குற்றக்கும்பல்களும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுமே உள்ளனர்.
எனினும், இலங்கை பொலிஸ் துறை இத்தகைய சக்திகளுக்கு ஒருபோதும் பணியாது என்றும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan