பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்
பிரான்ஸில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து, தொடர்ந்து நான்காவது வார இறுதியாக நேற்று நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தின்படி, நாடு முழுவதும் சுமார் 1,46,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரிஸில் மட்டும் 46,000 பேர் பங்கேற்றனர். தொழிற்சங்கங்களின் கணக்கின்படி, போராட்டக்காரர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆகும்.
அதிக சம்பளம் வேண்டும்
போராட்டங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 70,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர் பாரிஸ் மற்றும் லியோன் நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதுடன், கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன.

முன்னதாக, மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம், தற்போது தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் விரிவடைந்துள்ளது.
அதிக சம்பளம், சிறந்த பணிச்சூழல், கல்வி நிறுவனங்களுக்கான வளங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இந்தப் போராட்டங்கள் அரசியல் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளன.