மகாநாயக்கர்களை அவமதித்ததன் விளைவு.. வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு குறித்து தேரர் கிளப்பும் சர்ச்சை
மகாநாயக்க தேரர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட கொழும்பு மாநகர சபையின் மேயருக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் இயற்கையின் தண்டனையாகும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அரசுச் செய்திகள் ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர், "கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் தேவைகளுக்காக மகா சங்கத்தினரையும் பௌத்த மதத்தையும் பயன்படுத்திக்கொண்டனர்.
போராட்டம்
பின்னர் தங்களது தேவைகள் நிறைவேறியதும் மகா சங்கத்தினரைப் புறக்கணித்தனர். அரசியல் தலைவர்களுக்கு ஏதேனும் நெருக்கடி ஏற்படும்போது மாத்திரமே மகா சங்கத்தினரும் விகாரைகளும் நினைவுக்கு வருகின்றனர்.

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி மகா சங்கத்தினர் விஹாரமகாதேவி பூங்காவில் ஆர்ப்பாட்டத்தையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.
அந்தச் சந்தர்ப்பத்தில் கொழும்பு மாநகர சபையின் மேயர் மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார். அப்போது மகா சங்கத்தினருக்கு ஏற்பட்ட அவமதிப்பை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தனர்.
அரசுச் செய்திகள் ஆனால், தற்போது கொழும்பு நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதைப் பாருங்கள். நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கிக் குளம்போல மாறியுள்ளன. இதனைத்தான் கர்மவினை என்கிறோம்.
கொழும்பு மேயர்
மகா சங்கத்தினரை அவமதித்ததன் விளைவுகளை தற்போது அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் மேயர் என்ன செய்துகொண்டிருக்கின்றார்? நகரின் வடிகால்களை முறையாகச் சுத்தப்படுத்தவில்லை.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. வடிகால்களைச் சுத்தப்படுத்துவதற்குப் பதிலாக அவற்றை முறையாகப் பராமரிக்கத் தவறியுள்ளனர்.
நாங்கள் அறிந்த காலம் முதல் ஒருபோதும் வெள்ளத்தில் மூழ்காத கொழும்பு தேசிய வைத்தியசாலைகூட நேற்று நீரில் மூழ்கியுள்ளது. இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் யார்? கொழும்பு மாநகர சபையின் மேயரே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
சீனப் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கிய தொழில்நுட்ப கோடீஸ்வரர்: எச்சரிக்கும் அமெரிக்கா News Lankasri