நீதவான்களின் இடமாற்ற விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எவ்வித தொடர்பும் கிடையாது
நீதவான்களின் இடமாற்ற விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எவ்வித தொடர்பும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நீதவான்கள் உள்ளிட்ட நீதிச் சேவை அதிகாரிகளின் இடமாற்றங்கள், அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்ககள் போன்றவற்றில் அரசாங்கத்திற்கு எவ்வித அதிகாரமோ அல்லது தொடர்போ கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில கம்பஹா நீதவான் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.
நீதிச் சேவைகள் ஆணைக்குழு தபான விதிக் கோவைகளுக்கு அமைய காலத்திற்கு காலம் இடமாற்றங்கள் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
சில நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணை நடவடிக்கைகளில் அரசாங்கம் எந்தவொரு தலையீட்டையும் மேற்கொள்வதில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan