போர்த்துக்கல் அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்
ஐரோப்பிய கிண்ணத்திற்கான காலிறுதிப்போட்டிகளின் இன்றைய இரண்டாவது போட்டியில், கடைசியில் வழங்கப்பட்ட பனாற்ல்றிகளில் 5 இற்கு 4 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் அணி, போர்த்துக்கல் அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் மிக உத்வேகத்துடன் மோதின. பல்வேறு வாய்ப்புக்களும் நழுவிப்போக நிறைவில் இரண்டு அணிகளும் எந்தவிதமான கோல்களையும் அடிக்காத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது. அதன்படி வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க பனால்ற்றி உதைகள் வழங்கப்பட்டன.
அரையிறுதி போட்டி
அதன்போது போர்த்துக்கல் அணிவீரர் João Félix இனால் அடிக்கப்பட்ட பனால்ற்றியில், பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியே பாய்ந்துவிட, பிரான்ஸ் அணி 5-4 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.
அதன்படி வரும் செவ்வாய்க்கிழமை, பலமான ஸ்பெயின் அணியை அரையிறுதியில் பிரான்ஸ் சந்திக்கவுள்ளது. போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்ரியானோ ரொனால்டோவுக்கு இது நிறைவு ஐரோப்பியக்கிண்ண போட்டியாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
