காலி சிறையில் 19 கையடக்க தொலைபேசிகள் மீட்பு
காலி சிறைச்சாலையின் A,B மற்றும் C,D ஆகிய சிறைக்கூடங்களில் நேற்று (03.02.2026) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் போதைப்பொருட்களை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது 19 கையடக்கத் தொலைபேசிகளும் 11 சிம் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
அத்துடன் 4 கிராம் 384 மில்லிகிராம் நிறையுடைய 58 சிறிய பொதிகளில் பொதியிடப்பட்ட ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேநேரம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு பொதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறைச்சாலை தலைமையகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அடக்கம் பண்ணிடுங்க.. குணசேகரன் அதிர்ச்சி திட்டம்! எதிர்நீச்சல் தொடர்கிறது '4 பிப்ரவரி' ப்ரோமோ Cineulagam