பிரான்ஸில் அதிகரித்துள்ள பதற்றம் : அரசு பெண் செய்தித்தொடர்பாளர் மீது வன்முறைத் தாக்குதல்
பிரான்ஸ் (France) தேர்தலில் வலதுசாரியினரின் வெற்றியைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதால் நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் வேட்பாளர்கள் பலர் இனரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாகிவருவதோடு, மேக்ரான் கட்சியைச் சேர்ந்தவரும், பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளருமான பிரிஸ்கா தெவெனோட் (Prisca Thevenot) என்னும் பெண் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இவர் மீதான தாக்குதலுக்கு பல தரப்பினரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
தனது உதவியாளர் ஒருவரும் கட்சி ஆர்வலர் ஒருவருமாக சுவரொட்டிகளை வைத்துக்கொண்டிருக்கும்போது, சிலர் திடீரென தங்களிடம் சண்டைக்கு வந்ததாகவும், விமர்சனங்கள் பின்னர் உடல் ரீதியான தாக்குதலாக மாறியதாகவும் தெரிவித்துள்ள பிரிஸ்கா, தான் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது தாக்கப்பட்ட அவரது உதவியாளரும், கட்சி ஆர்வலரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார், சிறுவர்கள் உட்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா? Cineulagam
