பட்டப்பகலில் மாத்தறையை உறைய வைத்த துப்பாக்கிச்சூடு - பொலிஸ் கண்காணிப்பில் இருந்தவருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்
மாத்தறை, தெவுந்துறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் அச்சுறுத்தல் இருந்ததால் அவர் பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெவுந்துறையில் நேற்று (21.02.2026) பிற்பகல் ஒரு மணியளவில் மீன் வியாபாரியான 55 வயதான சிரில் ஹெந்தவிதாரண மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது.
சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 9 மி.மீ கைத்துப்பாக்கியை பயன்படுத்தி இந்தப் படுகொலை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்திருந்தது.
படுகொலை முயற்சி
பாதிக்கப்பட்டவர் 2023ஆம் ஆண்டு அவருக்குச் சொந்தமான, உணவகம் ஒன்றில் வைத்து படுகொலை முயற்சிக்கு இலக்காகியிருந்ததாக தெரியவருகிறது.
இதைத் தொடர்ந்து, குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையகத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், அவரது பாதுகாப்புக்காக பொலிஸார் கண்காணிப்பு பதிவு புத்தகத்தை பராமரித்து வந்துள்ளனர்.

அவரது பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்த அதிகாரிகள் அவருக்கு அறிவுறுத்தியிருந்தாலும், இந்த எச்சரிக்கைகளை மீறி பாதிக்கப்பட்டவர் அடிக்கடி பல்வேறு இடங்களுக்குச் சென்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு
உயிரிழந்த நபர், நேற்று கந்தரையில் இருந்து தெவுந்துறைக்கு முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே தடுத்து நிறுத்தப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் தங்கள் வாகனத்தில் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், நேற்று மாலை மாத்தறையின், அமலகொட பகுதியில் அந்த வாகனம் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri