தமிழீழ விடுதலைப் புலிகளை திருப்திப்படுத்தும் சுதந்திர தினம்..! சாடும் சரத் வீரசேகர
அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயந்து செயற்படுவதோடு அவர்களின் மனம் நோகாதபடி நடந்து கொள்வதாக முன்னாள் அமைச்சரும் மொட்டுக் கட்சியின் உறுப்பினருமான சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நேற்று (04.01.2026) கொண்டாடப்பட்ட 78ஆவது சுதந்திர தினம் தொடர்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார்.மேலும் உரையாற்றிய அவர்,
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சும் அரசு
1972ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்னர் 2009 ஆம் ஆண்டே எமது நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது.
அந்த யுத்தத்தில் முன்னிலை வகித்த இலங்கை இராணுவத்தின் விசேட படையணி மற்றும் கொமாண்டே படையணிகள் நடைபவனி செய்யும் போது வர்ணனையாளர் தித்வா சூறாவளியில் மக்களை பாதுகாத்தவர்கள் என்றே குறிப்பிட்டனர்.
பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாத்தவர்கள் என தெரிவிக்கவில்லை. இன்றைய சுதந்திர தின விழா தேசியத்திற்காகவா அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான தமிழ் பிரிவினை வாதிகளான புலம்பெயர் தமிழர்களை சந்தோசப்படுத்தவா? என கேட்க தோன்றுகிறது.

2009 ஆம் ஆண்டு இறுதி போரில் பயன்படுத்தப்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் மல்டி பெரல்கள் வாகன தொடரணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
இவை முதுகெலும்பு இல்லாத செயற்பாடுகளாகும். நாட்டில் இருந்த எந்த அரசாங்கமும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
you may like this
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri
'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா Cineulagam
அடக்கம் பண்ணிடுங்க.. குணசேகரன் அதிர்ச்சி திட்டம்! எதிர்நீச்சல் தொடர்கிறது '4 பிப்ரவரி' ப்ரோமோ Cineulagam
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan