30 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பாதிப்பு : மத்திய வங்கியின் நேரடி கண்காணிப்பின் கீழ் வரும் நிறுவனங்கள்

Central Bank of Sri Lanka Ranjith Siyambalapitiya Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Money
By Benat Nov 07, 2023 03:23 AM GMT
Report

நுண்கடன் கண்காணிப்பு அதிகார சபை அடுத்த ஆண்டு ஜனவரி மாதமளவில் ஸ்தாபிக்கப்படும். இதனை தொடர்ந்து சகல நுண்கடன் நிதி நிறுவனங்களும் மத்திய வங்கியினால் நேரடியாக கண்காணிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். 

நாட்டில் நுண்கடன் நிதி நிறுவனங்களின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக  30 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

நேற்றையதினம்(06) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நுண்கடன் நிதி நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகின்றன.

30 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பாதிப்பு : மத்திய வங்கியின் நேரடி கண்காணிப்பின் கீழ் வரும் நிறுவனங்கள் | Quick Loan Sri Lanka

நுண்கடன்களை முன்னிலைப்படுத்திய தற்கொலைகள், முரண்பாடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் சமூக கட்டமைப்பில் காணப்படுகின்றன.

நுண்கடன் நிதி நிறுவனங்களின் முறையற்ற செயற்பாடுகளினால் சுமார் 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் 11 ஆயிரம் நுண்கடன் நிதி நிறுவனங்கள் இயங்குகின்ற நிலையில் அவற்றில் 05 நிறுவனங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்கள் தான் முறையற்ற வகையில் செயற்படுகின்றன. நிதி நிறுவனங்களை பதிவு செய்வதை கட்டாயப்படுத்தும் சட்டமூலம் எதிர்வரும் மாதமளவில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

பதிவு செய்யாத நிறுவனங்கள் 05 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும். தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் 5 வருடகால சிறைத்தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

நுண்கடன் நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் நுண்கடன் கண்காணிப்பு அதிகார சபை அடுத்த ஆண்டு ஜனவரி மாதமளவில் ஸ்தாபிக்கப்படும்.

இதனை தொடர்ந்து சகல நுண்கடன் நிதி நிறுவனங்களும் மத்திய வங்கியினால் நேரடியாக கண்காணிக்கப்படும் என குறிப்பிட்டார். 

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இஸ்ரேல் மக்களின் அதிரடி முடிவு (Video)

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இஸ்ரேல் மக்களின் அதிரடி முடிவு (Video)

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பில் ஐ.நா வெளியிட்ட அறிவிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பில் ஐ.நா வெளியிட்ட அறிவிப்பு

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US