தமிழர் தாயகத்தில் 200 உயிர்களை காப்பாற்றிய கனேடிய தொண்டு நிறுவனம்
கனடாவை வாழ்விடமாக கொண்ட பாடகர் செந்தில் குமரன் தனது நிவாரண அமைப்பின் ஊடாக பாடல் நிகழ்வுகளை ஒழுங்கு செய்து, அதன் ஊடாகவும், அங்குள்ள கனடா கந்தசுவாமி ஆலயத்தில் பக்தர்கள் வழுங்கும் நிதியூடாகவும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவி செய்து வருகின்றார்.
அதன்படி, இலங்கையில் தமிழர் தாயகமெங்கும் அரசாங்க மருத்துவமனைகளின் பணி புரியும் இதயநோய் நிபுணர்களான வைத்தியர்கள் லஷ்மன், குருபரன், அருள்நிதி, ரகுநாதன், அரவிந்தன், ஜெரால்டு, ஜெயகாந்தன், விநோதன், ஹார்திக், போன்றோர் ஊடாக அவசரமாக சிகிச்சை செய்ய வேண்டும் என்று அடையாளபடுத்துகின்ற நோயாளிகளுக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சைகளை ஒழுங்கு செய்து அவர்களின் உயிர்களை காப்பாற்றி வருகிறார்.
200ஆவது சத்திர சிகிச்சை
இந்த உதவியில் பயனடைந்தோர் முழுவதும் சிறு பிள்ளைகள் மற்றும் இளம் குடும்பஸ்தர்கள் ஆவர். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 200ஆவது சத்திர சிகிச்சை, மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த வசந்தி அமல்ராஜுக்கு நடைபெற்று முடிந்தது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இலங்கையில் உள்ள பிரபலமான சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் காந்திஜி, மயக்க மருந்து நிபுணர் வைத்தியர் லுஷாந்த இருதய நோய் நிபுணர்கள் மற்றும் அவர்களுடன் இயங்கும் வைத்திய குழு, செந்தில் குமரனின் வேண்டுகோளை ஏற்று, தங்கள் நேரத்தை இலவசமாக வழங்கிட்டு இப்பணியில் அவருடன் சேர்ந்து உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.
கொழும்பிலுள்ள லங்கா மருத்துவமனையும் இவர் ஊடாக வரும் அனைத்து சிகிச்சைகளுக்கும் சிறப்பு கட்டணத்தை வழங்கி உதவி புரிகின்றனர்.
இதய சத்திர சிகிச்சைகள் மட்டுமல்லாது யாழ் போதனா வைத்தியசாலையின் இதய சத்திர சிகிச்சை பிரிவிற்கு தேவைப்பட்ட நான்கு கோடி மதிப்புள்ள இதய அதிர்வு கண்காணிப்பு இயந்திரம், மூன்று கோடி செலவில் மல்லாவி மற்றும் முல்லைத்தீவில் குருதி சுத்திகரிப்பு நிலையங்கள், அவரச இதய நோய் பிரிவு என்று மக்களுக்கு அவசியம் தேவைப்படும் மருத்துவ கட்டுமானங்களையும் கருவிகளையும் ஸ்தாபித்து இந்த நிறுவனம் பெரும் சேவையாற்றி வருகிறது.
செந்தில் குமரன், தான் சேர்க்கும் நூறு வீதமான நிதியினை இச்சேவைகளுக்கு வழங்கி, முழு நிதி விவரங்களை ஆண்டு தோறும் வெளியிட்டு வெளிப்படை தன்மையுடன் இயங்குவதால் அவருக்கு கனடா மட்டுமல்லாது புலம் பெயர் மக்களின் பெரும் ஆதரவு இருப்பதனை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri