14 வயதுடைய சிறுமியை கர்ப்பமாக்கிய 54 வயது நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாக்கிய 54 வயது பாதுகாவலரை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா குற்றவாளியாக இனம் கண்டு தீர்ப்பளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாகியமையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் புலன் விசாரணைகளின் பிரகாரம் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த எதிரிக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
14 வயதுடைய சிறுமி
அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்ற பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது விளக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் எதிரி தலைமறைவாகியிருந்தார்.
அதனை தொடர்ந்து எதிரி இல்லாத விளக்கத்துக்கு நியமிக்கப்பட்ட இவ்வழக்கானது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி ஸ்ரீ சிவஸ்கந்தஸ்ரீயால் நெறிப்படுத்தபட்டிருந்தது.
யாழ்.பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கியவர்கள் மக்கள் நலன் பற்றிப் பேசுகின்றனர்! அமைச்சர் சந்திரசேகரன் குற்றச்சாட்டு
மேல் நீதிமன்றம் அதிரடி
குறித்த விசாரணைகளின் பின்னர் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, வழக்கு தொடுநர் தரப்பு குறித்த எதிரிக்கு எதிரான குற்ற சாட்டினை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபித்துள்ளதாகவும் அதன் பிரகாரம் எதிரிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம், மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடும் செலுத்தப்பட வேண்டுமென தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

குறித்த குற்ற செயலின் போது எதிரியால் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகள், குறித்த சிறுமி கர்ப்பம் தரித்தமை, எதிரி வழக்கு விசாரணைகளில் இருந்து தலைமறைவாகியமை, சிறுமியின் பாதுகாவலரே குறித்த செயலை புரிந்தமை போன்ற காரணிகள் எதிரிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட பிரதான காரணிகளாக அமைந்துள்ளது என மேல் நீதிமன்ற நீதிபதி ஏ ஏ ஆனந்தராஜா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam