சீனா மற்றும் ரஷ்யாவிற்கு டிரம்ப் விடுக்கும் கடும் எச்சரிக்கை
ஈரான் போர் தொடர்பில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க-ஈரான் நாடுகளுக்கு இடையில் தற்பொழுது நடைபெற்று வரும் போரில் சீனாவோ அல்லது ரஷ்யாவோ பங்கேற்கவில்லை என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த நாடுகள் இதில் தலையிட்டால் அது அவர்களுக்கு "மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என அவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து தமது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களுடனான பேச்சுவார்த்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவின் பெய்ஜிங் நகரில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஈரானுக்கு எந்தச் சூழ்நிலையிலும் ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ போவதில்லை என ஜனாதிபதி ஷி ஜின்பிங் தம்மிடம் உறுதியளித்தார் எனவும் இதில் சீன நிறுவனங்களும் அடங்கும்எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஈரானுக்கு ஆயுதங்களை விற்கப் போவதில்லை என் கூறியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிலவேளகைளில் சீனாவோ அல்லது இதில் ஈடுபட்டால், அது அவர்களுக்கு மிகவும் மோசமானதாக முடியும். நிச்சயம் அது அவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவரைக் இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடித்தது.
இப்போரின் தொடக்கத்தில் வளைகுடா பகுதியில் உள்ள சி.ஐ.ஏ மையங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு, ரஷ்யா இலக்கு தொடர்பான தகவல்களையோ அல்லது ட்ரோன் தொழில்நுட்பங்களையோ வழங்கி உதவியதா என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
எனினும், இது குறித்த அறிக்கைக்கு கருத்து தெரிவிக்க ரஷ்ய அரசாங்கம் மறுத்துவிட்டது. ஈரானுக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய உதவியதற்காக ரஷ்யா மற்றும் சீனாவைச் சேர்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே பல்வேறு தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam