ஈரான் - இஸ்ரேல் மோதலில் குறுக்கிடும் புடின்.. மறுக்கப்பட்ட அலிகமேனி கொலைத்திட்டம்!
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பாதுகாப்பு கவலைகளை தணித்து, தெஹ்ரான் அமைதியான அணுசக்தி திட்டத்தைத் தொடர அனுமதிக்கும் ஒரு தீர்வைப் பெற பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ உதவக்கூடும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
சர்வதேச செய்தி நிறுவனங்களின் மூத்த செய்தித் தலைவர்களிடம் பேசிய புடின், "இது ஒரு நுட்பமான பிரச்சினை, இது தொடர்பில் என் பார்வையில், ஒரு தீர்வைக் காணலாம்.
ட்ரம்பின் கோரிக்கை
இஸ்ரேல் - ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்றால் ரஷ்யா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்று கேள்வி எழுப்பிய போது, புடின் பதிலளிக்க மறுத்து, அத்தகைய சாத்தியக்கூறு பற்றி விவாதிக்கக்கூட நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாஸ்கோவின் திட்டங்களை ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டதாகவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் யார் மீதும் எதையும் திணிக்கவில்லை; சூழ்நிலையிலிருந்து ஒரு சாத்தியமான வழியை நாங்கள் எவ்வாறு காண்கிறோம் என்பதைப் பற்றி மட்டுமே நாங்கள் பேசுகிறோம். ஆனால், முடிவு, நிச்சயமாக, இந்த அனைத்து நாடுகளின் அரசியல் தலைமையைப் பொறுத்தது, முதன்மையாக ஈரான் மற்றும் இஸ்ரேல்.
அணு மின் நிலையக் கட்டுமானத்தை முடிக்க ரஷ்யா ஈரானுக்கு உதவியது என்றும், தற்போது மேலும் இரண்டு உலைகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பணிகள் நடந்து வருகின்றன, 200க்கும் மேற்பட்ட எங்கள் நிபுணர்கள் தளத்தில் உள்ளனர். பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று இஸ்ரேலிய தலைமையுடன் நாங்கள் உடன்பட்டோம்" என்றும் புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஒரு தொலைபேசி அழைப்பில் உரையாடிய புடினிடம், ட்ரம்ப் ஈரான் - இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்யுமாறு கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan
