ஈரானின் முக்கிய பலத்தை தாக்கவுள்ள அமெரிக்க குண்டுகள்.. வெளியான திடுக்கிடும் தகவல்
புதிய இணைப்பு
30,000 பவுண்டுகள் எடையுள்ள குண்டுகளால் ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தை அழிக்க முடியுமா என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இராணுவ ஆலோசகர்களிடம் கேட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்கள் என்று அழைக்கப்படும் பதுங்கு குழி குண்டுகள் அமெரிக்க ஆயுதக் கிடங்கில் உள்ளன.
ஆனால் குண்டுகளை நிலைநிறுத்த தேவையான ஆயுதங்களோ அல்லது குண்டுவீச்சு விமானங்களோ இஸ்ரேலிடம் இல்லை.
இஸ்ரேலிய வான்வழி ஆயுதங்களுக்கு எட்டாத ஆழத்தில் ஃபோர்டோ நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் அவ்வளவு உறுதியாக இருக்கிறாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஃபோர்டோவுக்கு எதிராக குண்டுகள் ஏவப்படக் கூடும் என்று பென்டகனின் அதிகாரிகள் ட்ரம்பிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இந்த குண்டுகள் இதுவரை போரில் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை, சோதனைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை தாக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், அவர் தாக்குதல் நடத்த முன்பு ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிடுமா என்று வாய்ப்பளித்து காத்திருப்பதாகவும் அதிகாரிகளிடம் குறிப்பிட்டதாக கூறப்படுகின்றது.
இறுதி வாய்ப்பு
ட்ரம்ப் நேற்று, மூத்த அதிகாரிகளிடம் இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவது குறித்து அவர் முடிவு செய்துவிட்டாரா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, ஒப்புதல் அளித்ததாகவும் இருப்பினும் ஈரானின் முடிவு குறித்து அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அமெரிக்கா மத்திய கிழக்கில் பல பகுதிகளில் போர் படைகளை தயார்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம், டொனால்ட் ட்ரம்ப், ஈரான் அணுசக்தி திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இருப்பினும், ஈரானிய அயதுல்லா அதிகாரி அலி கமேனி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
