ஆண்ட்ரூ இளவரசர் மீது பாலியல் முறைகேடு : அதிர்ச்சியூட்டும் புதிய குற்றச்சாட்டு
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்களில், பிரித்தானியாவின் ஆண்ட்ரூ இளவரசர் (Andrew Mountbatten-Windsor) மீது பாலியல் முறைகேடு தொடர்பான அதிர்ச்சியூட்டும் புதிய குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு புளோரிடாவில் உள்ள எப்ஸ்டீனின் இல்லத்தில் வைத்து, ஒரு பெண் நடனக் கலைஞர் பாலியல் ரீதியாக வற்புறுத்தப்பட்டதாக ஒரு சட்டக் கடிதம் கூறுகிறது.
சட்டக் கடிதத்தின்படி
2011 ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்தச் சட்டக் கடிதத்தின்படி, கிளப் ஒன்றில் பணியாற்றி வந்த அந்த நடனக் கலைஞர், நடனமாடுவதற்காக 10,000 டொலர் தருவதாகக் கூறி எப்ஸ்டீனின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவர் அரை நிர்வாணமாக நடனமாடிய பிறகு, எப்ஸ்டீனும் ஆண்ட்ரூ இளவரசரும் தன்னை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
அந்த இல்லத்தில் நடந்த விருந்தில், ஆபாசமான ஆடைகள் அணிந்திருந்த பல இளம் பெண்கள் இருந்ததாகவும், அவர்களில் சிலர் சிறுவர்கள் (சுமார் 14 வயது மதிக்கத்தக்கவர்கள்) போலத் தெரிந்ததாகவும் அந்த நடனக் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொண்ட நிலையில்
"நான் நடனமாட மட்டுமே வந்தேன்" என்று அவர் மறுத்தபோது, எப்ஸ்டீன் அதற்குப் பணம் தருவதாகக் கூறி வற்புறுத்தியுள்ளார்.
இறுதியில் அவர் ஒரு பாலியல் தொழிலாளியைப் போல நடத்தப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆண்ட்ரூ இளவரசரைத் தொடர்புகொண்டபோது அவர் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், எப்ஸ்டீன் தொடர்பான அனைத்துப் பாலியல் குற்றச்சாட்டுகளையும் அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
ஏற்கனவே விர்ஜினியா கியூஃப்ரே தொடர்ந்த வழக்கை அவர் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொண்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் கடிதங்கள் அவர் மீதான நெருக்கடியை அதிகரித்துள்ளன.
சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அடக்கம் பண்ணிடுங்க.. குணசேகரன் அதிர்ச்சி திட்டம்! எதிர்நீச்சல் தொடர்கிறது '4 பிப்ரவரி' ப்ரோமோ Cineulagam