“எங்கள் புத்தாண்டு நடு வீதியில்” நுவரெலியாவில் பொதுமக்களால் போராட்டம் (Video)
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நுவரெலியாவில் பொதுமக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
“எங்கள் புத்தாண்டு நடு வீதியில்” எனும் தொனிப்பொருளின் கீழ் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் இளைஞர், யுவதிகள், பெரியோர், சிறியோர், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் வரிசை வாழ்க்கை நிறுத்து, பிச்சை எடுக்கும் நிலை வேண்டாம், மக்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதே என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
அத்தோடு, தலைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்திருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். இதன்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா அமைப்பாளர் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.




தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri
மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! Manithan
த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. "குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது" Cineulagam
நடிகர் பார்த்திபனுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி! மைக்கை பிடித்து அறிவில்லாத அநாகரீக பேச்சு.. Cineulagam
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri